English Blog

Wednesday 6 June 2018

உங்களுடைய விரிவடைந்த புரோஸ்டேட்டுக்கான தலைசிறந்த சிகிச்சை

விரிவடைந்த புரோஸ்டேட்டுக்கான சிகிச்சை (புற்றுநோயற்ற வகை )

பெனின் ப்ரோஸ்டாடிக் ஹைப்பர் பிளேசியா (Benign prostatic hyperplasia) என்பது ஒரு புற்றுநோயற்ற ப்ரோஸ்டேட் சுரப்பிகளின் விரிவந்தடைந்த நிலையைக் குறிக்கிறது. இந்நிலை 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் காணப்படுகிறது.

விரிவடைந்த புரோஸ்டேட்சுரப்பி சிறுநீர் பாதையை அழுத்துவதால் சிறுநீர்பைலிருந்து வரும் சிறுநீர் தடைசெய்யப்படுகிறது. இதனால்  சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குகிறது. இவ்வாறு தேங்குவதன் மூலம் சிறுநீர் பாதை நோய்த்தொற்று, சிறுநீர் துவாரத்தில் முழு அடைப்பு, மேலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.

http://www.urologistindia.com/benign-prostate-enlargement/

 நீங்கள் கீழ்கண்ட அறிகுறிகளைக் உணர்கிறீர்களா ?

  • குறைந்த  சிறுநீர் ஓட்டம்
  • கடினத்துடன் சிறுநீர் கழிப்பது
  • சிறுநீர் ஓட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கும் நிலை
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீர் தேக்கம்

ஏன் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது ?

உட்கொண்ட மருந்துகள் பயனளிக்காத போதும் மேலும் சிறுநீர் தேங்கல், தொடர்ந்த சிறுநீர் பாதை நோய்த்தொற்று, சிறுநீரகத்தில் ரத்தம் வெளியேறுதல், குறைந்த அளவிலான சிறுநீரக செயல்பாடு, சிறுநீர்ப்பை கல், போன்ற உபாதைகள் ஏற்படும்போதும் ஹோல்மியும் லேசர் எண்ணுகிலேஷன் (Holmium laser enucleation)  முறை மேற்கொள்ளப்படுகிறது.

ஹோல்மியம் லேசர் எண்ணுகிலேஷன் (Holmium laser enucleation) விரிவடைந்த புற்றுநோயற்ற வகை புரோஸ்டேட்டுக்கான ஒரு மிகவும் மேம்பட்ட நுட்பம் கொண்ட சிகிச்சையாகும்.

விரிவடைந்த புரோஸ்டேட்டுக்கான ((புற்றுநோயற்ற வகை ) சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

  • இம்முறை சிறுநீர் துவாரம் வழியாக செய்யம்படுகிறது
  • இம்முறையில் வெட்டுக்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை
  • இது ஒரு முழுமையான என்டோஸ்கோபிக் முறையாகும்

முதலில் நோயாளி நோய்ச்சார்ந்த மேலும் தேவையான சில பரிசோதனைகளுக்கு உ ட்படுத்தபடுகிறார்.

பொது மருத்துவர், இதய மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் நோயாளியின் உடல்நலத்தை பரிசோதிக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்கு முன்பு நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் .

எண்டோஸ்கோபியின் மூலம் சிறுநீர் துவரம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் சோதிக்கப்படுகிறது. ரிசெக்டாஸ்கோபி (Resectoscopy) எனும் சிறப்பு கருவி மூலம் லேசர் பைபர் (Laser fiber) அனுப்பப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த100 வாட்ஸ் ஹோல்மியம் லேசரை பயன்படுத்தி விரிவடைந்த ப்ரோஸ்டேட் அகற்றப்பட்டு "மோர்சிலேட்டர்" கருவியின் உதவியால் ப்ரோஸ்டேட் சிறுசிறு துண்டுகளாக்கப்படுகிறது.
 
ஒரு வடிகுழாய் சிறுநீரை வடிசெய்வதற்காக பொருத்தப்படுகிறது. 24 மணி நேரம் கழித்து இது அகற்றபடுகிறது.

லேசர் அறுவை சிகிச்சை நன்மைகள்

  • விரைவான மீட்பு
  • இது வயதானவர்களுக்கான பாதுகாப்பான சிகிச்சை
  • இரத்த இழப்பு இல்லை
  • இதய நோயாளிகளுக்கான  பாதுகாப்பான சிகிச்சை
  • மருத்துவமனையில் தங்க குறுகிய காலம் போதுமானது
http://www.urologistindia.com/benign-prostate-enlargement/

இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு என்ன எதிர்பார்க்கலாம்?

அறுவை சிகிச்சைக்கு பின் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் செல்வதற்கான அவசரம் போன்ற பிரச்சினைகள் தோன்றும். இவை சில வாரங்களில் சரியாகி விடும்.
நோயாளி அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறிது தூரம் நடத்தல், மேலும் சாதாரண உணவு வகைகளை உட்கொள்ளலாம் 

சில நோயாளிகள் குறைந்த சிறுநீர் அழுத்த கசிவை எதிர் கொள்ள நேரிடலாம். இது சில வாரங்களில் சரியாகிவிடும்
 
டாக்டர் என்.ஆனந்தன் ஒரு தலைசிறந்த சிறுநீரக மற்றும் ஆண் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை போக்கும் மருத்துவர். இவர் விரிவடைந்த புற்றுநோயற்ற வகை புரோஸ்டேட்டுக்கான சிகிச்சை முறைகளை லேசர் தொழில் நுட்பம்மூலம் (Laser surgery for enlarged prostate in India) அளிக்கிறார். இது முற்றிலும் பாதுகாப்பான மற்றும் வலியற்ற முறையாகும். இவர் ஒரு சீனியர் கான்சல்டண்ட் ஆக காவேரி மற்றும் அப்போலோ ஸ்பெக்ட்ரா ஹாஸ்பிடல் சென்னையில் ப்ராஸ்டேட் தொடர்புடைய பிரிச்சினைகளுக்கு ஆலோசனை தருகிறார்

http://www.urologistindia.com/contact-us/

Mail Us @ drnanandan@gmail.com
Visit Us @ urologistindia.com